பிரபல காப்புறுதி நிறுவனம் ஒன்றின் யாழ்.கிளையின் ஊழியர்கள் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
யாழ்.நகரில் உள்ள காப்புறுதி நிறுவனத்தின் ஊழியருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்னர் சுகயீனம் ஏற்பட்டிருந்த நிலையில் அவருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த கிளையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகளின் படி 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் கிளையில் பணியாற்றிய இதர ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தொற்று நீக்கப்பட்டதன் பின்னர் வேறு ஊழியர் அணியை பயன்படுத்தி கிளை இயக்கப்பட்டுள்ளது.