சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யியின் இலங்கை பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜுன் மாதம் முதல் வாரத்தில் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார். எனினும் இலங்கையில் கொரோனா தொற்றுப் பரவல் தீவிரமடைந்துள்ளதால் சீன வெளிவிவகார அமைச்சரின் பயணம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சீன வெளிவிவகார அமைச்சரின் பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளதை சிறிலங்காவின் பிராந்திய ஒத்துழைப்புகளுக்கான இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரியவும் உறுதிப்படுத்தியுள்ளார்.