யாழ்.கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் 9 பொலிஸ் உத்தியோகஸ்த்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
இது குறித்த அறிவிப்பு சுகாதாரத் தரப்பினரால் சம்பந்தப்பட்ட பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 21 தொற்றாளர்கள் நேற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் அது குறித்து தொற்றாளர்களுக்கு அறிவிக்கப்பட்டதுடன், அவர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.