இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 46பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த மரணங்கள் நேற்று பதிவாகியுள்ளன என்று அரச தகவல் திணைக்களம் இன்று அதிகாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதுவே நாட்டில் நாளொன்றில் பதிவான அதிகூடிய கொரோனா மரண எண்ணிக்கையாகும்.
நேற்று இடமம்பெற்ற 46 மரணங்களுடன் நாட்டில் இதுவரை 1,178பேர் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.