மேஷம்
வேலைப்பளு அதிகரிக்கும் நாள். கொடுத்த வாக்கைக் கடைசி நேரத்தில் காப்பாற்றுவீர்கள். குடும்பத்தினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. புதிய நபர்களின் அறிமுகத்தால் பொருள் வரவு உண்டு.
ரிஷபம்
ஆரோக்கியம் சீராகும் நாள். அறிமுகமில்லாதவர்களிடம் அதிகம் பேச வேண்டாம். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் உண்டு. தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
மிதுனம்
எதிலும் விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். எதையும் ஒருமுறைக்கு இருமுறை செய்யும் சூழ்நிலை உருவாகும். சுபகாரியப்பேச்சுகள் முடிவடைவதில் தாமதம் ஏற்படும். மனக்குழப்பம் அதிகரிக்கும்.
கடகம்
முன்னேற்றம் கூடும் நாள். தொழிலில் ஏற்பட்ட இடையூறுகள் அகலும். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். பிறருக்கு உதவுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பொருளாதாரப் பற்றாக்குறை தீரும்.
சிம்மம்
நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். நம்பிக்கைகள் அனைத்தும் நடைபெறும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.
கன்னி
புத்திசாலித்தனமான செயல்பாடுகளால் புகழ் கூடும் நாள். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முன்வருவீர்கள். வாகனமாற்றச் சிந்தனை மேலோங்கும். வருமானம் பெருக புதிய வழி பிறக்கும்.
துலாம்
தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். சகோதர வழியில் உதவிகள் கிடைக்கலாம். முடியாது என்று நினைத்த காரியம் இன்று முடிவடையும். நிலம் சம்மந்தமான வழக்குகள் சாதகமாகும்.
விருச்சிகம்
வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். சொந்த பந்தங்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் உண்டு. வருமானம் திருப்தி தரும்.
தனுசு
உற்சாகத்தோடு செயல்படும் நாள். வெளிவட்டாரத் தொடர்பு விரிவடையும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். கடினமான காரியங்களைக் கூட எளிதாக முடிப்பீர்கள்.
மகரம்
குடும்பச்சுமை கூடும் நாள். கொடுக்கல் வாங்கல்களில் ஆதாயம் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் பெருமைப்படும் சம்பவங்கள் நடைபெறும். விவாகப் பேச்சுகள் முடிவடைவதற்கான அறிகுறி தென்படும்.
கும்பம்
செலவுகள் அதிகரிக்கும் நாள். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. முயற்சிகளில் தடைகளைச் சந்திக்க நேரிடலாம். நாவில் கவனம் தேவை. நட்பு பகையாகலாம்.
மீனம்
எதிர்ப்புகள் அகன்று இனிமை சேரும் நாள். வருமானம் போதுமானதாக இருக்கும். தொழில்ரீதியாக ஏற்பட்ட குழப்பங்கள் படிப்படியாக மாறும். வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.