கிளிநொச்சி – பளை இன்னாச்சி குளத்தில் பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டிருக்கின்றது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், பளை தம்பகாமம் பகுதியில் 45 வயதுடைய பெண் ஒருவர் நேற்றைய தினம் காணாமல் போயிருந்தார். இந்நிலையில் இன்று காலை பளை இன்னாச்சி குளத்தில் பெண் ஒருவருடைய சடலம் காணப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக அந்த பகுதிக்கு சென்றுள்ள பொலிஸார் சடலத்தை மீட்கும் நடவடிக்கையில் பிரதேச வாசிகளுடன் இணைந்து முன்னெடுத்துவருவதாக தகவல் கிடைத்துள்ளது.
இவ்வாறு குளத்தில் சடலமாக காணப்படுபவர் நேற்றைய தினம் காணாமல் போயிருந்த பெண் என முதல்கட்ட தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.