இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்குமிடையில் இடம்பெற்ற போர் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்த நிலையில் காஸா முனையில் இந்த போர் நிறுத்தத்தை கொண்டாடி வருகின்றனர்.
இதேவேளை, போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதன் பிறகு அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்ரேல் ஆதரவாளர்களுக்கும், பாலஸ்தீன ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
டைம்ஸ் சதுக்கத்தில் இடம்பெற்ற இந்த மோதலின்போது, பட்டாசுகளை கொளுத்தி வீசி தாக்கினர். இதில் சிலர் காயமடைந்தனர். இதையடுத்து பொலிஸார் அவர்களுக்கிடையிலான மோதலை தடுத்தியதுடன் வன்முறையில் ஈடுபட்ட பலரைக் கைது செய்துள்ளனர்.
கடந்த வாரம் இஸ்ரேல்-ஹமாஸ் சண்டை உச்சத்தில் இருந்தபோது பாலஸ்தீன ஆதரவாளர்கள் அமெரிக்காவின் நகரங்களில் மிகப்பெரியளவில் ஆர்ப்பாட்ட பேரணிகளை நடத்தினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.