மேஷம்
பிரபலமானவர்களால் பிரச்சினைகள் தீரும் நாள். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். தொழிலில் எதிர் பார்த்த லாபம் உண்டு. வரன்கள் வாயில் தேடி வரும்.
ரிஷபம்
விரோதங்கள் விலகும் நாள். விலகிச்சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். உற்றார் உறவினர்களின் ஒத்துழைப்பால் ஆதாயம் தரும் தகவல் உண்டு. வியாபார நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.
மிதுனம்
செல்வாக்கு மேலோங்கும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். வீடு, மனை வாங்கப் போட்ட திட்டங்ளில் வெற்றி கிடைக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
கடகம்
கடந்து வந்த பாதையை அசை போட்டுப் பார்க்கும் நாள். தந்தை வழியில் எதிர்பார்த்த ஒத்துழைப்பு கிடைக்கும். வி.ஐ.பி.க்களால் வியக்கத்தக்க தகவல் வரலாம். குடும்ப ஒற்றுமை பலப்படும்.
சிம்மம்
தவறுகளைச் சுட்டிக்காட்டுவதன் மூலம் தடுமாற்றங்களைச் சந்திக்கும் நாள். கொள்கைப்பிடிப்போடு செயல்படுவீர்கள். தொழில் முன்னேற்றப்பாதையை நோக்கிச் செல்லும். கல்யாண முயற்சி கைகூடும்.
கன்னி
யோகமான நாள். தொலைபேசி வழித் தகவல் தொழிலுக்கு உறுதுணையாக அமையும். விவாகப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
துலாம்
உத்தியோக முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும் நாள். கவுரவம், அந்தஸ்து உயரும். வாங்கல் கொடுக்கல்களில் ஆதாயம் கிடைக்கும். பணப்பற்றாக்குறை அகலும்.
விருச்சிகம்
எதிர்பார்ப்புகள் எளிதில் நடைபெறும் நாள். வரவு திருப்தி தரும். தொலைபேசி வழித்தகவல் தொழில் வளர்ச்சிக்கு வித்திடும். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிட்டும்.
தனுசு
மனதில் துணிச்சல் உண்டாகும். எதிலும் வெற்றி கிடைக்கும். எந்த ஒரு சின்ன விஷயம் கூட லாபமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும் அதனால் கவுரவம் உண்டாகும். பூமி, வாகனம் மூலம் ஆதாயம் உண்டாகும்.
மகரம்
மனக்குழப்பம் ஏற்படும் நாள். மறதியின் காரணமாக சில காரி யங்களை செய்யாமல் விட்டுவிடு வீர்கள். உதவிச் செல்வதாகச் சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம்.
கும்பம்
விரயங்கள் அதிகரிக்கும் நாள். வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீகள். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வந்துசேரலாம். தொழில் பங்குதாரா்களால் தொல்லைகள் ஏற்படலாம்.
மீனம்
தடைகளை உடைத்தெறிந்து முன்னேற்றம் காணும் நாள். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்கு மாற்றினத்தவர்கள் கைகொடுத்து உதவுவர்.