வடக்கில் கடந்த 24 மணி நேரத்தில் 81 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த இரவு பத்து தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 32 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற அன்டிஜன் பரிசோதனையின் போது ஆடைத் தொழிற்சாலைகளைச் சேர்ந்த 25 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூட முடிவுகள் நேற்றிரவு வெளியாகியுள்ளன. அவற்றில் 35 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களின் விவரம் வருமாறு:-
கிளிநொச்சியில் ஆறு பேர்.(கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேர், கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேர்)
யாழ்ப்பாணத்தில் 20 பேர் (யாழ்.போதனாவைத்தியசாலையில் நால்வர், உடுவில்சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஐவர், மானிப்பாய் ஆதார வைத்தியசாலையில் ஒருவர், சங்கானை சுகாதார வைத்தியஅதிகாரி பிரிவில் ஒருவர்,பருத்தித்துறைஆதார வைத்தியசாலையில் ஒருவர்,கோப்பாய் ஆதார வைத்தியசாலையில் 03 பேர்,ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் ஒருவர், சாவகச்சேரி ஆதாரவைத்தியசாலையில் ஒருவர், யாழ்.சிறைச்சாலையில் 03 பேர்)
வவுனியாவில் ஆறு பேர் (வவுனியாமாவட்ட வைத்திய சாலையில் 03 பேர், செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையில் 03 பேர்)
முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருவர்.
மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர்.