2021ஆம் ஆண்டு ஜூன் நடுப்பகுதியில் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவார் என்று கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவை நேற்று சந்தித்த கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டது என அபேவர்தன தெரிவித்துள்ளார். இதேவேளை, கொழும்பு துறைமுக நகர யோசனை மீதான வியாக்கியானம் மூலம் நீதித்துறையின் அதிகாரத்தையும், நாடாளுமன்றத்தையும், உயர் நீதிமன்றம்
பாதுகாத்துள்ளது என்று ரணில் விக்கிரமசிங்க கருதுவதாக வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.