திரைப்பட மற்றும் சின்னத்திரை தொடர்களின் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சில தொலைக்காட்சி நாடகங்கள் முன் கூட்டியே இரண்டு மூன்று வாரங்களுக்கு தேவையான காட்சிகளை படமாக்கி விட்டார்களாம்.
கொரோனாவின் தீவிர பரவல் காரணமாக, தமிழகத்தில் அத்தியாவசிய பணிகள் தவிர அனைத்து விதமான செயல்பாடுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் எதிர்வரும் 31ஆம் திகதி வரை திரைப்பட படப்படிப்புகள் நடைபெறாது என ஃபெப்ஸி அமைப்பின் தலைவரான இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
இதனால் திரைப்பட மற்றும் சின்னத்திரை தொடர்களின் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சில சீரியல்கள் முன் கூட்டியே இரண்டு மூன்று வாரங்களுக்கு தேவையான காட்சிகளை படமாக்கி விட்டார்களாம். டப்பிங், எடிட்டிங் போன்ற பணிகள் நடைபெறுவது சிக்கலானதாக உள்ளது. மேலும் தொலைக்காட்சி நாடக நடிகர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் செய்திகளும், மரணிக்கும் செய்திகளும் அடிக்கடி வெளியாகி மக்களை கவலையுற செய்துள்ளன.
ஒரு சில தொலைக்காட்சி நாடகங்கள் மே 31 வரை ஒளிபரப்பும் அளவுக்கு காட்சிகள் இல்லாததால் அந்த சீரியலின் ஒளிபரப்பு தடைபடலாம் என்று கூறப்பட்டது. அதில் சில நாடகங்கள் முற்றிலும் நிறுத்தப்பட வாய்ப்பிருக்கிறது. இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான அன்புடன் குஷி நாடகம் ஒளிபரப்பு நிறுத்தப்படுகிறதாம்.
இந்த நாடகங்களளுக்கு நல்ல வரவேற்பு இருந்த நிலையில் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதால் ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். ‘அன்புடன் குஷி’ நாடகம் விஜய் டிவியில் கடந்த வருடம் ஜனவரி 27ஆம் திகதி முதல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நாடகம் பிரஜின் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக முதல் மான்ஸி ஜோஸி என்பவர் குஷியாக நடித்தார். பின்னர் சில காரணங்களால் அவருக்கு பதிலாக தற்போது ஸ்ரேயா அஞ்சன் நடிக்கிறார். மேலும் மீரா கிருஷ்ணா, தீபா ஷங்கர், சந்தனா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
இந்த நாடகத்தின் காணொளிகள் அடிக்கடி சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. குறிப்பாக இன்ஸ்டாகிராமில் இந்த நாடகதுக்கென தனி ஃபேன் பேஜ் எல்லாம் உண்டு. இந்நிலையில் இந்த நாடகத்தின் ஒளிபரப்பு நிறுத்தப்படவிருப்பது ரசிகர்களுக்கு சோகத்தை அளித்துள்ளது. பொதுவாகவே விஜய் டிவி சீரியல்களுக்கு ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பு உண்டு. அதற்கு முக்கிய காரணம், திரைப்படங்களுக்கு நிகரான சீரியல்களின் சுவாரஸியமான கதைகள், மேக்கிங் ஆகியவை முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி என விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகின்றன. ரசிகர்களின் சமூக வலைதள பதிவுகளை பார்க்கும்போதே அது எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை உணர முடியும். கொரோனா உள்ளிட்ட பிரச்சனைகளால் உடல் மற்றும் மன ரீதியான பிரச்சனைகளுக்கு ஆட்பட்டிருக்கும் மக்களுக்கு இந்த சீரியல் பெரும் ஆறுதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி:tamil.news18