மேஷம்
அறிவு திறன் கூடும். இனிமையான பேச்சின் மூலம் பலரது உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். தனாதிபதி சுக்கிரனால் செல்வம் சேரும். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்ப்புகள் அகலும்.
ரிஷபம்
தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பலவகை முன்னேற்றங்களும் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள்.
மிதுனம்
செல்வ நிலை உயரும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். புதிய தொழில் தொடங்குவதற்கு அனுபவம் மிக்கவர்களிடம் ஆலோசனை கேட்பீர்கள். சகோதர அனுகூலம் உண்டு.
கடகம்
நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் சொல்லிற்கு மதிப்புக்கொடுப்பர். வரவு திருப்தி தரும்.
சிம்மம்
தடைகள் அகலும் நாள். தனவரவு திருப்தி தரும். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி தரும். உடன்பிறப்புகள் வழியில் ஏற்பட்ட பிரச்சினைகள் ஓயும். பழைய நண்பர்களால் பண நெருக்கடி அகலும்.
கன்னி
புகழ் மிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் நாள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். விலகிச்சென்ற நண்பர்கள் விரும்பி வந்து சேருவர். தொலைபேசி வழித்தகவல் வருமானம் வர வழிகாட்டும்.
துலாம்
எந்த ஒரு விஷயத்திலும் ஈடுபடும் முன்பு தயக்கம் ஏற்பட்டு பின்னர் தெளிவு உண்டாகும். குடும்பத்தில் தீடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே எதையும் பேசி தெளிவுபடுத்திக் கொள்வது நன்மை தரும்.
விருச்சிகம்
அக்கம் பக்கத்து வீட்டாரின் ஆதரவு கிடைக்கும் நாள். அதிகாலையிலேயே நல்ல தகவல் வரலாம். நாட்டுப்பற்று மிக்கவர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியம் ஒன்றைச் செய்து முடிப்பீர்கள்.
தனுசு
மனதில் துணிச்சல் உண்டாகும். எதிலும் வெற்றி கிடைக்கும். எந்த ஒரு சின்ன விஷயம் கூட லாபமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும் அதனால் கவுரவம் உண்டாகும். பூமி, வாகனம் மூலம் ஆதாயம் உண்டாகும்.
மகரம்
வளர்ச்சி கூட வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். விரயம் உண்டு. எடுத்த காரியங்களில் சிறு தடைகள் ஏற்படலாம். பிறருக்கு பணப்பொறுப்புகள் சொல்வதை தவிர்ப்பது நல்லது.
கும்பம்
ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களின் ஒத்துழைப்பால் தொழில் முன்னேற்றம் உண்டு.
மீனம்
எல்லாவற்றிலும் லாபம் கிடைக்கும். மரியாதை அந்தஸ்து கூடும். எதிர்ப்புகள் விலகும். மன மகிழ்ச்சி உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். மேலதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும்.