கடந்த 24 மணித்தியாலங்களில், தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 340 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர், அஜித் ரோஹன தெரிவித்தார்.
இவர்களில் 99 பேர், தேசிய அடையாள அட்டை இலக்க முறைமையை பின்பற்றாதவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் முதல் இதுவரையில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 10 ஆயிரத்து 413 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேநேரம் நடமாடும் வர்த்தகர்கள் தனிமைப்படுத்தல் விதிகளை முறையாக பின்பற்றகின்றனரா? என்பது தொடர்பான சுற்றுவளைப்பு நடவடிக்கைகள் நேற்று மேற்கொள்ளப்பட்டிருந்தது. இன்றைய தினமும் இந்த சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படும்.
அதேநேரம் அடையாள அட்டையின் இலக்க அடிப்படையில் வெளியில் நடமாடக்கூடிய நடைமுறையை மீறிய குற்றச்சாட்டில் நேற்று 99 பேர் கைது செய்யப்பட்டனர். அத்தியாவசிய பணிகளுக்காக அல்லாமல் ஏனைய நடவடிக்கைகளுக்காக வெளியில் நடமாடுகின்றவர்கள் அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் அடிப்படையிலேயே நடமாட முடியும் என தெரிவித்தார்.