முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களை நினைவு கூர்ந்து வவுனியா தமிழ்விருட்சம் அமைப்பு மற்றும் கருமாரி அம்மன் கோவில் நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் குட்செட் வீதி கருமாரி அம்மன் கோவிலில் இன்று விசேட வழிபாட்டு நிகழ்வொன்று நடத்தப்பட்டது.
சுகாதார வழிகாட்டல்களை பின்பன்றி இந்த வழிபாட்டு நிகழ்வு நடத்தப்பட்டது. இதில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள், உறவுகளை இழந்தவர்கள் என சிலர் கலந்துகொண்டனர்.