இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் சீ.வி.விக்னேஸ்வரன் இன்று அஞ்சலி செலுத்தினார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகத்தில் விக்னேஸ்வரன், நினைவுச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
முள்ளிவாய்க்கால் நினைவு நாளை அனுஷ்டிக்க அரசு தடைபோடுவதானது அந்த நேரத்தில் அரசு தவறிழைத்தமையை உறுதிப்படுத்துவதாகவே அமைகிறது என தெரிவித்தார். இந்த நிகழ்வில் தமிழ் மக்கள் கூட்டணியின் உறுப்பினர்கள் சிலர் கலந்துகொண்டிருந்தனர்.