முள்ளிவாய்க்காலில் நினைவஞ்சலி இடம்பெறக் கூடாதென பெரும் தடைகள் ஏற்படுத்தப்பட்ட நிலையில் தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் மு எம்.கே.சிவாஜிலிங்கம் இலங்கை தமிழ் அரசு கட்சியின் வாலிபர் முன்னணி பிரமுகர் பீற்றர் இளஞ்செழியன் உள்ளிட்ட தரப்பினர் இன்று(18ஃ05) காலை நந்திக்கடலில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்கள்.
முள்ளிவாய்க்கால்இ நந்திக்கடல் பிரதேசங்கள் முழுமையான இராணுவ வலயங்களாக்கப்பட்டு பெருமளவு இராணுவம், கடற்படை , புலனாய்வாளர்கள் , பொலிஸார் குவிக்கப்பட்டுள்ள நிலையில் எம்.கே.சிவாஜிலிங்கம், பீற்றர் இளஞ்செழியன், நிஷாந்தன் சுவீகரன் உள்ளிட்டவர்கள் தமது அஞ்சலிகளைச் செலுத்தியுள்ளமைகுறிப்பிடத்தக்கது.