கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலத்தின் சில சரத்துக்கள், அரசியல் அமைப்புடன் இணங்கவில்லை. அவற்றை மீள்திருத்தம் செய்து அல்லது சிறப்பு பெரும்பான்மை வாக்குகளால் அல்லது சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்ற முடியும் என்ற உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை, சபாநாயகர் நாடாளுமன்றில் அறிவித்துள்ளார்.