பிலியந்தலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியில் நிவாரணப்பொருட்களை விநியோகம் செய்த பெண் உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியில் நிவாரணப்பொருட்களை விநியோகம் செய்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்த பெண் உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார் என பொலிஸ்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நிவாரணங்களை வழங்கிவிட்டு திரும்பிக்கொண்டிருந்த பெண் உத்தியோகத்தரை மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் தாக்கியுள்ளார்.
சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்களை மிரட்டுவது தாக்குவதை சகித்துக்கொள்ளப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடும் எவருக்கும் எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.