மேஷம்
நன்மையால் நல்ல பெயர் எடுக்கும் நாள். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். பண வரவுகள் திருப்தியாக இருக்கும். குடும்ப முன்னேற்றம் கூடும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு.
ரிஷபம்
வீட்டுப் பராமரிப்பில் வேகம் காட்டும் நாள். விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலம் வெற்றி கிட்டும். விருப்ப ஓய்வு பற்றிய சிந்தனை மேலோங்கும். தொலைபேசி வழிச் செய்திகளால் உற்சாகமடைவீர்கள்.
மிதுனம்
அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். உடல் நலனில் அக்கறை காட்டுவது நல்லது. மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற இயலுமா என்பது சந்தேகம் தான்.
கடகம்
மூட்டுக் கட்டைகள் அகன்று முன்னேற்றம் கூடும் நாள். முக்கியப் புள்ளிகளின் ஒத்துழைப்பு கிட்டும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாள்வது நல்லது. உறவினர்களின் உதவி கிடைக்கும்.
சிம்மம்
யோகமான நாள். ஆதாயம் தரும் வேலையொன்றில் அக்கறை காட்டுவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். மனதில் உற்சாகம், தெம்பு அதிகரிக்கும். அரசியலில் செல்வாக்கு உயரும்.
கன்னி
புதிய பாதை புலப்படும் நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும் தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். எதிர்கால முன்னேற்றத்திற்காக புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். தன்னம்பிக்கை கூடும்.
துலாம்
அலைபேசி வழித் தகவல் அனுகூலம் தரும் நாள். ஆதாயம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். சான்றோர்களின் சந்திப்பு உண்டு. உங்கள் சொற்களுக்கு உறவினர்கள் மத்தியில் மதிப்பு கிடைக்கும்.
விருச்சிகம்
மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும் நாள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகலாம். மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பால் தொழில் முன்னேற்றம் காண்பீர்கள். அலைபேசி வழியாக அனுகூலமான தகவல் வரலாம்.
தனுசு
சேமிப்பு கரையும் நாள். திட்டமிட்ட காரியங்களை மாற்றியமைப்பீர்கள். அருகிலிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வரவைக் காட்டிலும் செலவு கூடுதலாக இருக்கும். குடும்பத்தில் குழப்பங்கள் உருவாகும்.
மகரம்
மகிழ்ச்சியான நாள். வியாபாரத்தில் உள்ள மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் நாட்டம் செல்லும். சொந்த பந்தங்களுடன் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் அகலும்.
கும்பம்
அந்தஸ்து உயரும் நாள். அதிகாலையிலேயே நல்ல தகவல் வந்து சேரும். குடும்பத்தினர்களின்தேவைகளைப் பூர்த்தி செய்யச் சிறிது செலவிடும் சூழ்நிலை உண்டு. பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
மீனம்
காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். வாகனப் பழுதுகளைச் சரி செய்யும் எண்ணம் ஏற்படும். தொழில் ரீதியாக வரவேண்டிய பாக்கிகள் வந்து சேரும்.