குக்வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் அனைவரின் மனங்களை வென்ற பவித்ரா லஷ்மி அண்மையில் பதிவிட்டுள்ள புகைப்படங்களுக்கு பெரும் வரவேற்புகள் குவிந்து வருகின்றன.
பல குறும்படங்களில் நடித்துள்ள இவர் விஜய் டிவியில் குக்வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பவித்ரா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா எனும் நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமானவர் பவித்ரா. அதன்பிறகு மாடலிங் துறையில் ஒரு சில காலங்கள் பணியாற்றியுள்ளார்.
இதையடுத்து, ‘3 சீசன் ஆப் லவ் ஸ்டோரி‘ மற்றும் மலையாள படத்தில் வாய்ப்பை பெற்ற நடிகை பவித்ரா லக்ஷ்மி, உல்லாசம் என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பல குறும்படங்களிலும் அவ்வப்போது போட்டோஷூட் செய்தும் அசத்தி வருகிறார்.
நகைச்சுவை நடிகர் சதீஷ் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தில் பவித்ரா லட்சுமி கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார். இப்படத்தை கிஷோர் ராஜ்குமார் இயக்கவுள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது.
நடிகைபவித்ரா மேலும் ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தில்அவர், நடிகர் கதிருக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம். இதனை புதுமுக இயக்குனர் ஒருவர் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. ரொமாண்டிக் படமாக உருவாகவிருக்கும் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில்வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தனது இணையதளத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். மேலும், தவறான விஷயங்களை துரத்துவதை நீங்கள் நிறுத்தும் போது சரியான விஷயங்கள் உங்களுக்கு பிடித்ததாக மாறுகின்றன எனவும் குறிப்பிட்டுள்ளார்.