மேஷம்
தேக்க நிலை மாறி ஆக்கநிலை ஏற்படும் நாள். திடீர் வரவு உண்டு. தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். தொலை துாரத்திலிருந்து எதிர்பார்த்த தகவல் வரும். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும்.
ரிஷபம்
குடும்பச்சுமை கூடும் நாள். ஆரோக்கியத்தில் சிறுசிறு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு அகலும். தொழிலுக்காக எடுத்த முயற்சி கடைசி நேரத்தில் கைகூடலாம். வரவை விடச் செலவு அதிரிக்கும்.
மிதுனம்
பழைய கடனை அடைக்கப் புதிய கடன் வாங்கும் நாள். பக்கபலமாக இருப்பவர்கள் விலகாமல் இருக்க பக்குவமாகப் பேசுவது நல்லது. கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. விரயங்கள் ஏற்படும்.
கடகம்
பற்றாக்குறை அகலும் நாள். பணப்பொறுப்புகள் சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும். தன்னம்பிக்கையோடு பணிபுரிவீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
சிம்மம்
வாட்டங்கள் அகன்று வருமானம் திருப்தி தரும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உடல் நலனில் கவனம் தேவை. மூத்தவர்களின் ஆலோசனைகள் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
கன்னி
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். வருமோ, வராதோ என்று நினைத்த பணவரவொன்று கைக்கு கிடைக்கலாம். வியாபார விரோதங்கள் மறையும். நேற்று நடைபெறாத காரியம் இன்று நடைபெறும்.
துலாம்
கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். செலவிற்கேற்ற வரவு உண்டு. குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வியாபார வளர்ச்சி திருப்தி தரும்.
விருச்சிகம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. திட்டமிட்ட காரியமொன்றைச் செய்ய இயலாமல் போகலாம். வாங்கல் கொடுக்கல்களில் விழிப்புணர்ச்சி தேவை.
தனுசு
தடைகள் அகலும் நாள். கடன் பிரச்சினைகளைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கைகொடுக்கும்.
மகரம்
முக்கியப் புள்ளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும் நாள். பிள்ளைகளின் வளர்ச்சியைக் கண்டு பெருமையடைவீர்கள். அடிமைத் தொழிலிருந்து விலகி சுய தொழில் செய்யலாமா என்று சிந்திப்பீர்கள்.
கும்பம்
திய பாதை புலப்படும் நாள். துணிச்சலான சில முடிவுகளை எடுப்பீர்கள். பெற்றோர் மூலம் பெருமைக்குரிய சம்பவமொன்று நடைபெறலாம். புதிய வாகனம் வாங்கப் போட்ட திட்டம் கைகூடும்.
மீனம்
நேர்மறைச் சிந்தனைகளை வளர்த்துக்கொள்ள வேண்டிய நாள். நீண்ட தூரத்திலிருந்து நல்ல தகவல் வரும். உடன்பிறப்புகள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பப் பிரச்சினை தீரும்.