சீரியல் நடிகரான குட்டி ரமேஷ் உடல்நலக்குறைவால் உயிழந்துள்ளார். தமிழ் சினிமாவில் தொடர்ந்து நிறைய பிரபலங்களின் மரண செய்திகள் அதிகம் வருகின்றன. ரசிகர்கள் அன்றாடம் தொலைக்காட்சியில் பார்த்த பிரபலங்கள் இப்போது இல்லையா என அதிர்ச்சியாகின்றனர். நடிகர்கள் விவேக், பாண்டு, நெல்லை சிவா, ஜோக்கர் துளசி, மாறன் மற்றும் இயக்குனர் KV ஆனந்த் என மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பலர் சமீபத்தில் உயிரிழந்தனர்.
இந்நிலையில் பிரபல சீரியல் நடிகரான குட்டி ரமேஷ் தற்போது மரணம் அடைந்துள்ளார். சன்.டிவி, விஜய் டிவி உள்ளிட்ட பிரபலமான சேனல்களில் பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார் குட்டி ரமேஷ். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தேன்மொழி BA ஊராட்சிமன்ற தலைவர் என்ற தொடரில் நாயகியின் தந்தையாக நடித்துவந்தார்.