யாழ்.வடமராட்சி – அத்தாய் பகுதியில் சுகாதார நடைமுறைகளை மீறி பிறந்தநாள் கொண்டாடிய 15 பேர் கட்டாய தனிமைப்படுத்தலக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று (14.05.2021) இடம்பெற்றிருக்கின்றது. கொரோனா கட்டுப்பாடுகளை மீறி அத்தாய் பகுதியில் பிறந்த நாள் நிகழ்வு நடைபெறுவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது.
இதனை ஊர்ஜிதப்படுத்த கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி செந்தூரன், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நெல்லியடி பொலிஸார் குறித்த இடத்திற்குச் சென்றுள்ளனர். அங்கு பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொண்டோர் தப்பி சென்றுள்ளனர்.
இதனால் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்வையிட்டு சுமார் 15 பேர் சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.