கொரோனா தடுப்பிற்காக ஒரு வார காலமாக முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பிரதேச செயலகங்களினால் தெரிவு செய்யப்பட்டுள்ள மக்களுக்கு 5,000 ரூபாய் பெறுமதியான 20 அத்தியாவசியப் பொருட்கள் உள்ளடங்கலாக இந்நிவாரண பொதி வழங்கப்படவுள்ளதுன.
இந்நிவாரணப் பொதி நாளை மறுதினம் திங்கட்கிழமை முதல் மக்களுக்கு வழங்கப்படவுள்ள அதேவேளை அவற்றினை மூன்று தினங்களுக்குள் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையினை அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம சேவை அதிகாரிகள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மூலம் முன்னெடுக்கப்படும் என்றும் வர்த்தக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.