நீதிமன்ற பிடியாணைக்கு அமைவாக அருண் சித்தார்த்தை கைது செய்வதற்காக யாழ்ப்பாணம் பொலிஸார் சென்றபோது அருண் சித்தார்த் மற்றும் அவரது மனைவி இணைந்து பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளனர்.
இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில், ஹெரோயின் போதைப்பொருள் விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையின் அடிப்படையில் அருண் சித்தார்த்தை கைது செய்வதற்கு யாழ்ப்பாணம் பொலிஸார் இன்று (20.11) அவரது இல்லத்திற்கு சென்றுள்ளனர்.
இதன்போது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அருண் சித்தார்த் மற்றும் அவரது மனைவி இணைந்து தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். நிலமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த யாழ்ப்பாணம் பொலிஸார் அருண் சித்தார்த்தை கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட அருண் சித்தார்த்தை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய பின்னரே அவர் மீதான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மேலும் தெரிவித்தனர்.