இந்திய கர்நாடகா மாநிலத்தில் கடும்மழையால் வீடு இடிந்து வீழ்ந்ததில் ஒரே குடும்பத்தில் 2 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளிலும் கடும்மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், பெலகாவி மாவட்டத்தில் பாதல்-அங்கால்கி கிராமத்தில் கடும்மழையால் வீடு இடிந்து வீழ்ந்துள்ளது.
இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 7 பேரும் ஒரே குடும்ப உறுப்பினர்கள் ஆவர். அவர்களில் 2 பேர் குழந்தைகள் ஆவர்.
இந்த நிலையில், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை இரங்கல் தெரிவித்துள்ளதுடன், உயிரிழந்தோர் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.