ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று காலை நடைபெறவுள்ள கோவிட் தடுப்பு செயலணியின் கூட்டத்தில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரியவருகின்றது.
இவ்வார இறுதியில் கடுமையான போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானம் இன்றைய கூட்டத்தில் எடுக்கப்படலாம் எனத் தெரிகின்றது.
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தை தாண்டி, தினசரி பலியானோரின் எண்ணிக்கை 150 ஐ தாண்டியிருக்கும் நிலையிலேயே இன்றைய கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறுகின்றது.