1980 களில் புகழ் பெற்று விளங்கிய நாடகமான ‘வள்ளி திருமணம்’ நாடகத்தை மையமாக கொண்டு காமெடி ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக “வள்ளி மயில்” திரைப்படம் உருவாகிறது.
இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சத்தியராஜுடன் விஜய் ஆண்டனி நடிப்பில் வித்தியாசமான கதைக்களத்துடன் இத்திரைப்படம் படமாக்கப்படுகிறது. இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் தற்போது ரிலீசாகி உள்ளது.
இயக்குனர் சுசீந்திரன் தமிழ் சினிமா வரலாற்றில் தனக்கென தனியிடம் பிடித்த இயக்குனர்.
இத்திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு , கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்திய திரைப்படமாக வெளிவரவுள்ளது. ஆகவே இவரது இந்த திரைப்படத்தையும் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.