வடக்கு மாகாண சபை தேர்தல் இடம்பெறுமாக இருந்தால் மாவை சேனாதிராஜா தான் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார்.
“தேர்தல் அறிவிக்கப்படுமாக இருந்தால் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். அதற்கான ஏற்பாடுகளுடன் நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
மாவை சேனாதிராஜா தான் எங்கள் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவார்.
முதலில் வெளியிலிருந்து புலமையாளர்களை கொண்டு வந்தோம். அவர்கள் வெளியிலிருந்து வந்து அரசியலை படித்து இந்த விடயங்களை கையில் எடுத்து நடத்துவதற்கு நீண்ட நாட்கள் ஆகின்றன.
அதற்குள் ஐந்து ஆண்டுகள் முடிந்து விடுகின்றன.
ஆகையினால் முதலமைச்சராக இருக்க வேண்டியவர் ஒர் அரசியல் தலைவர் என்பது எனது தனிப்பட்ட கருத்து. இது தொடர்பில் கட்சிக்குள் முழு இணக்கப்பாடு உள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்