லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் மாற்றமில்லை என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
லாஃப்ஸ் சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலைகளை அதிகரிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.
இதன்படி, லாஃப்ஸ் 12.5 கிலோ எரிவாயு கொள்கலனின் விலை 363 ரூபாவினாலும், 5 கிலோ கொள்கலனின் விலை 145 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதற்கமைய, 12.5 கிலோ லாஃப்ஸ் எரிவாயு கொள்கலனின் விலை 1,856 ரூபாவாகவும், 5 கிலோ எரிவாயு கொள்கலனின் விலை 743 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளன.