றோலர் தொழிலிற்கு எதிராக செய்யப்பட்ட போராட்டத்தின் எதிரொலியாக இன்றைய தினம் (01.11) இந்திய மீனவர்களின் பிரச்சனை தொடர்பாகவும், அவர்களால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாகவும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உடன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தலைமையிலான குழுவினர் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
முன்னாள் மாகாணசபை உறுப்பினர் திரு.சந்திரலிங்கம் சுகிர்தனின் ஒழுங்குபடுத்தலில் மீனவர்கள் சார்பான பிரதிநிதிகள் ஆகிய என்.வி. சுப்பிரமணியம்தலைவர் வடமாகாண கடல் தொழிலாளர் இணையம், யே. பிரான்சிஸ் உப தலைவர் வடமாகாண கடல் தொழிலாளர் இணையம், ஏ. மரியராசா பொருளாளர் வடமாகாண கடல் தொழிலாளர் இணையம், அன்ரனி யேசுதாஸன் தேசிய மீனவர் நல்லிணக்க வடக்கு கிழக்கு இணைப்பாளர், வி.அருள்நாதன் தலைவர் முல்லைத்தீவு அண்னை வேளாங்கண்ணி கடல் தொழிலாளர் கூட்டுறவு சங்கம் ஆகியோர் சந்திப்பை மேற்கொள்கின்றனர்.