இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னைநாள் பொருளாளரும், கட்சியின் மூத்த பிரமுகருமான “எஸ்.ரி. ஆர்’ என்று அழைக்கப்படும் எஸ். தியாகராஜா நேற்று கொழும்பில் காலமானார். அவருக்கு வயது 92.
வாழ்நாள் முழுவதும் தமிழரசுக் கட்சியின் பெருந்தூணாக விளங்கிய தொழிலதிபர் அவர். யாழ்ப்பாணம் (ராஜா), வவுனியா (வசந்தி), திருகோணமலை (சரஸ்வதி), மட்டக்களப்பு (சாந்தி) தியேட்டர் உரிமையாளரான அவர், தந்தை செல்வா முதல் கொண்டு அனைத்துத் தமிழரசுக் கட்சித் தலைவர்களோடும் ஆத்மார்த்தமான நெருக்கத்தோடு பழகியவர்.
சிறுவயதில் மிகக் கீழ்மட்டத்திலிருந்து, தமது கடும் உழைப்பால் சமூகத்தில் உயர்ந்தவர்.
தமிழக முன்னாள் மதலமைச்சர் எம்.ஜீ,ஆரை. இலங்கைக்கு அழைத்தவந்தவரும் அவர்தான்.