யாழ்.சங்கானை – நிற்சாமம் சிலம்புபுளியடி கோவிலுக்குஅருகே உள்ள வீட்டில் இருந்த 14 பவுண் நகை களவாடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,குறித்த வீட்டில் உள்ளவர்கள் மு.ப 10 மணிக்கு கொண்டாட்டம் ஒன்றிற்கு சென்றுவிட்டு, நேற்று பி.ப. 5 மணிக்கு வீட்டிற்கு வந்து வீட்டினை அவதானித்தனர்.
இதன்போது கதவு உடைத்து நகை களவாடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இந்நிலையில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இளவாலை பொலிஸார் சந்தேக நபரைத்தேடி வருகின்றனர்.