யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய் பகுதியில் இ.போ.ச பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியிருக்கின்றது.
காரைநகரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் வந்த இ.போ.ச பேருந்து காலை 7.30 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் பயணிகள் பலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இங்கு வீதி புனரமைப்பு பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில் வேகமாக வந்த பஸ் மழை காரணமாக சறுக்கி விபத்துக்குள்ளாகியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விபரம் இணைக்கப்படும்..