யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 2 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.
யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுப்பிட்டியைச் சேர்ந்த 57 வயதுடைய ஆண் ஒருவர் நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் வல்வெட்டித்துறை சேர்ந்த 75 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். சுகாதார பரிசோதகரின் ஆலோசனைக்கு அமைய அவரது சடலம் மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அவருக்கு கோரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 160ஆக உயர்வடைந்துள்ளது.