மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு நாளை (03) கொழும்பில் மேற்கொள்ளவுள்ள ஆர்ப்பாட்டத்தின் காரணமாக எந்த அடிப்படையிலும் மின்வெட்டு ஏற்படாது என்று மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் உறுப்பினர் சரித்த ஜயநாத் இன்று (02) தெரிவித்துள்ளார்.
தேசிய வளங்களை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து எரிபொருள், துறைமுக மற்றும் மின்சார ஒன்றிணைந்த தொழிற்சங்கங்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் நாளை (03) கொழும்பில் இடம்பெறவுள்ளதாக குறித்த சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
நாளை இடம்பெறுவது வேலைநிறுத்தமல்ல எனவும் இது ஆர்ப்பாட்டம் மாத்திரமே எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாளைய தினம் வேலைநிறுத்தம் எப்போது என அறிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.