மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டீசைட் தோட்டப்பகுதியில் இன்று (11/01) காலை இடம்பெற்ற விபத்தில் 6 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
டீசைட் தோட்ட மேல் பிரிவிலிருந்து பாடசாலை மாணவர்கைள ஏற்றி வந்த ஆட்டோ, தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதனையடுத்து மாணவர்கள் மஸ்கெலியா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். சிகிச்சைகளின் பின்னர் ஐவர் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். ஒரு மாணவர் தங்கியிருந்த சிகிச்சை பெற்றுவருகின்றார். ஆட்டோ சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.