நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்தாவது,
எதிர்வரும் திங்கட்கிழமை (22.11) சாவகச்சேரி நீதிமன்றத்துக்கு என்னை அழைத்துள்ளார்கள். வழக்கு எண் மட்டுமே தந்துள்ளார்கள். குற்றவியல் வழக்கா? அல்லது குடியியல் வழக்கா? அல்லது முறைப்பாட்டாளர் யார்?
எந்தச் சட்டத்தை மீறியதாக வழக்கு? எனக் குறிப்பிடாது நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
80 வயதில் முள்முடித் தீநுண்மித் தொற்று எனக்கு வராமல் இருக்க பொது இடங்களுக்குப் போவதை நான் தவிர்த்து வந்துள்ளேன். நீதிமன்றம் பலர் கூடும் இடம். அங்கு நான் எப்படிப் போவேன்?
தென்மராட்சியில் கடந்த 16 நாள்களில் தீநுண்மித் தொற்றால் 4 பேர் இறந்துள்ளனர். முன்பை விடக் கூடுதலான எண்ணிக்கையில் தென்மராட்சியில் தீநுண்மிப் பாதிப்பு. நீதிமன்றம் இந்தச் சூழ்நிலையைக் கவனத்தில் எடுக்கவில்லையா? கேட்பாரில்லையா? – என்று குறிப்பிட்டார்.