ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலர் கமல் குணரத்ன, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய உள்ளிட்ட பல சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மனிதகுல விரோத செயல்களுக்கு பொறுப்பானவர்கள். இவர்களை விசாரணை செய்து உரிய நேரத்தில் கைது செய்ய தலைமை வழக்கறிஞருக்கு அழைப்பு விடுக்கும் வகையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ஐ. சி. சி) நேற்று முக்கிய சட்ட சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் போரால் பாதிக்கப்பட்டு – தற்போது ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் 200 தமிழர்கள் சார்பாக சர்வதேச மனித உரிமைகள் சட்டங்கள் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் சேவைகளை வழங்குகின்ற குளோபல் றைற்ஸ் கொம்ப்ளைன்ஸ் எல். எல். பி. (Global Rights Compliance LLP) என்ற அமைப்பால் ரோம் சட்டத்தின் 15ஆவது சரத்தின் (Article 7 of the Rome Statute) கீழ் இந்த சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன, முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய மற்றும் பலர் உட்பட பல சிரேஷ்ட இலங்கை அதிகாரிகள், ‘கடத்தல்கள், சட்டவிரோத காவலில் வைத்தல் மற்றும் சித்திரவதை போன்ற மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு பொறுப்பானவர்கள் என்று இந்த சமர்ப்பணம் கூறுகின்றது.
பாதிக்கப்பட்டவர்கள் தாம் எதிர் கொண்ட துன்புறுத்தல்களின் தீவிரம் காரணமாக இலங்கையை விட்டு வெளியேறி இங்கிலாந்தில் தஞ்சம் அடைவதைத் தவிர, அவர்களுக்கு வேறு வழியிருக்கவில்லை என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால், கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் கமால் குணரத்ன தலைமையி லான இலங்கைப் படையினரின் அச்சுறுத்தல்கள், சித்திரவதைகள் மற்றும் துன்புறுத்தல் கொள்கைகளின் விளைவாக பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதற்கான உரிமையை இழந்தனர்.
இலங்கையில் வசிக்கும் தங்கள் அன்புக்குரியவர்கள் துன்புறுத்தல்கள் மற்றும் அச்சுறுத்தல் களுக்கு உள்ளாவதாலும், இங்கிலாந்தில் தங்கள்மீது தொடரும் கண்காணிப்பு, துன்புறுத்தல்களாலும் பாதிக்கப்பட்ட வர்கள் தொடர்ந்து அவதிப்படுகின்றனர். இந்தக் குற்றங்கள் ஐ.சி.சியின் சட்டங் களுடன் இணங்கும் இங்கிலாந்து எல்லைக் குள் ஓரளவு செய்யப்பட்டுள்ளன என்ப தால் இக்குற்றங்கள் தொடர்பில் நடவ டிக்கை எடுக்க முடியும் எனவும் சமர்ப் பணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த சமர்ப்பணம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.
வழக்கறிஞர்களும் இதேபோன்ற சமர்ப்பணத்தை பிரிட்டன் பெருநகர பொலிஸாரின் போர்க் குற்றக் குழுவிடமும் சமர்ப்பித்துள்ளனர். பெரும் அட்டூழியங்களுக்கு காரண மானவர்கள்மீது இலங்கை அரசாங்கத்தை நடவடிக்கை எடுக்க செய்வதில் சர்வதேசம் பல முயற்சிகளின் பின் தோல்வியடைந் தது. எனவே, இந்த விவகாரம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு பரிந்துரைக்கப் படவேண்டும் என்பதே உயிர் பிழைத்த – பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் கோரிக்கையாக உள்ளது. எனினும், ஐ.சி.சி உலகெங்கும் உள்ள ஒருசில வழக்குகளிலேயே விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இலங்கை ரோம் சட்டத்தை ஏற்காமையால் அங்கு நடந்த குற்றங்களை விசாரிப்பது என்பது கடினமானது. ஆனால், மியன்மார் விவகாரத்தால் மற்றொரு சாத்திய வழி உள்ளது. மியன்மார் ரோம் சட்டத்தை ஏற்காத போதிலும், ரொஹிங்கிய அகதிகள் இடம் பெயர்ந்து வாழும் பங்களாதேஷை எல் லையாகக் கொண்டு வழக்குகள் விசாரிக் கப்படுகின்றன. இந்த நடைமுறை இலங்கை விடயத்திலும் பொருந்தும். கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்து 12 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இப்போது அவர் இலங்கையின் தலைவராக உள்ளார். மருத்துவமனைகள் மீது எறிகணை வீச்சு, பரவலான பாலியல் வன்முறைகள், பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப் பட அல்லது காணாமல் ஆக்கப்படல் என அவரின் மேற்பார்வையில் நடந்த தாக்குதல்களுக்கு யாரும் பொறுப்பேற்க வில்லை. இன்னமும்,
லண்டன் மற்றும் சர்வதேசம் முழுவதிலும், தாயகத்திலும் வாழும் தமி ழர்கள் பொறுப்புக்கூறலையும் நீதியையும் தேடிக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், எதிர்வரும் 2021 ஒக் ரோபர் 31 முதல் நவம்பர் 12ஆம் திகதி வரையில் பிரித்தானியாவின் ஸ்கொட்லாந்து, கிளாஸ்கோ நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 2021 காலநிலை மாற்ற மாநாட்டில் ((COP26)) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்து கொள்ளவுள்ளார். இவ்வாறான நிலையிலேயே சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இந்த சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. எனினும், ஒரு நாட்டின் ஜனாதிபதி என்ற அடிப்படையில் சர்வதேச இராஜ தந்திர சலுகைகளை கோட்டபாய ராஜபக்ஷ கொண்டுள்ளார். இதனால், அவ ரைக் கைது செய்வது சாத்தியமில்லை என சில சட்டவல்லுநர்கள் சுட்டிக்காட் டியுள்ளனர்