மேஷம்
புகழ் மிக்கவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். விடியும் பொழுதே வியக்கும் செய்திகள் வந்து சேரும். விரும்பிய பொருட்களை வாங்கிச் சேர்ப்பீர்கள். விவாகப் பேச்சு நல்ல முடிவிற்கு வரும்.
ரிஷபம்
நிதி நிலை உயரும் நாள். உடன் பிறப்புகளால் உதவியுண்டு. அடிப்படை வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ளும் எண்ணம் உருவாகும். முன்னேற்றத்திற்கு நண்பர்கள் கைகொடுத்து உதவுவர்.
மிதுனம்
நிதானத்துடன் செயல் பட வேண்டிய நாள். நீண்ட நாள் நண்பர் ஒருவரின் நட்பு கிடைக்கும். அலுவலகப் பணிகளில் தாமதம் ஏற்படலாம். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவுகள் உட்கொள்ள வேண்டாம்.
கடகம்
உற்சாகத்துடன் செயல்படும் நாள். உடனிருப்பவர்களால் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
சிம்மம்
மனக்கலக்கம் அகன்று மகிழ்ச்சி கூடும் நாள். முடங்கியிருந்த தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். புதிய திட்டங்களைத் தீட்டி வெற்றி காண்பீர்கள்.
கன்னி
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். வீடு வாங்கும் முயற்சி கைகூடும். சுபவிரயங்கள் உண்டு.
துலாம்
நல்லவர்களைச் சந்தித்து நலம் காணும் நாள். பொருளாதார நிலையை உயர்த்தப் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். நேற்று செய்யாமல் விடுபட்ட வேலை யொன்றை இன்று செய்து முடிப்பீர்கள்.
விருச்சிகம்
திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். திடீர் வரவு உண்டு. மறக்க முடியாத சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். மாற்றினத்தவர்கள் உங்கள் கூட்டு முயற்சிக்கு கைகொடுத்து உதவுவர்.
தனுசு
காலை நேரத்தில் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். கடமையில் தொய்வு ஏற்படாதிருக்க கடவுள் வழிபாடு செய்வது நல்லது. அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் உருவாகும்.
மகரம்
அருகிலிருப்பவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கும்பம்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். வெற்றிக்கு துணை புரிபவர்கள் வீடு தேடி வருவர். அடுத்தவர் நலனில் காட்டிய அக்கறைக்கு ஆதாயம் கிடைக்கும். பிள்ளைகளின் வழியில் சுபச்செய்தி வந்து சேரும்.
மீனம்
குடும்ப முன்னேற்றம் கூடும் நாள். உற்றார் உறவினர்களின் ஒத்துழைப்பால் உள்ளம் மகிழ்வீர்கள். கடன் பிரச்சினைகளைச் சமாளிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும்.