காலநிலை உச்சி மாநாட்டில் பங்கெடுப்பதற்ககாக ஸ்கொட்லாந்து கிளாஸ்கோ சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தங்கியிருந்த விடுதியைச் சூழ்ந்து புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் பெருமளவு பொலிஸார் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டு கடும் பாதுகாப்புக்கு மத்தியில் ஜனாதிபதி அங்கிருந்து வெளியேறினார்.
அவரை ஏற்றிய வாகனம் போராட்டக்காரர்களை மிக வேகமாகக் கடந்து சென்றது. இதன்போது அங்கு கூடியிருந்த போராட்டக்காரர்கள் “போா்க்குற்றவாளி” கைது செய்! கைது செய்” என கோஷமிட்டனர்.
இதேவேளை, ஹோட்டலில் இருந்து பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வெளியேறிய ஜனாதிபதி, காலநிலை உச்சி மாநாடு இடம்பெறும் இடத்துக்குச் சென்றுள்ளார். அங்கும் எதிர்ப்பை வெளிப்படுத்த புலம்பெயர் தமிழர்கள் தயாராகி வருவதாகத் தெரியவருகிறது