அத்தியாவசிய பொருட்கள் கட்டுப்பாட்டு விலையை மீறி விற்பனை செய்யப்படுகின்றமையை கட்டுப்படுத்தும் நோக்கில் நுகர்வோர் விவகாரங்கள் தொடர்பான அதிகாரசபை சட்டத்தை திருத்தம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
2003 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க நுகர்வோர் விவகாரங்கள் தொடர்பான அதிகாரசபைச் சட்டத்தின் 60 ஆம் உறுப்புரையின் கீழ் 5 ஆம் உப உறுப்புரையை திருத்தம் செய்வதற்காக கடந்த ஜூலை மாதம் 19 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, அத்தியாவசியப் பொருட்களை ஒரு சில வர்த்தகர்கள் கட்டுப்பாட்டு விலையை மீறி அதிக விலையில் விற்பனை செய்வதைக் கட்டுப்படுத்துவதற்காக இத்திருத்தங்கள் மூலம் தேவையான சட்ட ஏற்பாடுகளை வகுப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
அதற்கமைய, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்ட மூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளதுடன், குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் வர்த்தக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.