செவ்வாய்க்கிழமை, 10 ஜூலை 2021 ஆடி 25
நல்ல நேரம் 08:00 AM – 09:00 AM
நட்சத்திரம் மகம் காலை 11.18 வரை பின்பு பூரம்
திதி வளர்பிறை துவிதியை மாலை 6.56 மணி வரை.
இராகுகாலம் 03:00 PM – 04:30 PM
எமகண்டம் 09:00 AM – 10:30 AM
குளிகை 12:00 Noon – 01:30 PM
சந்திராஷ்டமம் மகரம்
மேஷம்
நட்பால் நல்ல காரியம் நடை பெறும் நாள். நாணயப் பாதிப்பு அகலும். எந்த காரியமும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர்.
ரிஷபம்
மக்கள் செல்வங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். மங்கல நிகழ்ச்சி மனையில் நடை பெறவில்லையே என்ற கவலை அகலும். விரும்பிய காரியத்தை விரும்பியபடியே செய்து முடிப்பீர்கள்.
மிதுனம்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். வரும் தொலை பேசி வழித் தகவல் வருமானம் தரக்கூடியதாக அமையும். வீட்டை அழகுபடுத்தும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோக உயர்வு உறுதியாகலாம்.
கடகம்
உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைக்கும் நாள். உத்தி யோக முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் அனுகூலம் உண்டு. வருமானம் திருப்தி தரும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.
சிம்மம்
நிதி நிலை உயரும் நாள். நீண்ட நாளைய எண்ணம் நிறை வேறும். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடை பெறுவதற்கான அறிகுறி தோன்றும். உடல் நலத்திற்கு ஒவ்வாத உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
கன்னி
கூட்டாளிகளால் நன்மை கிடைக்கும் நாள். வீட்டிற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. கை மாற்றாக கொடுத்த தொகை வந்து சேரும்.
துலாம்
விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாள். குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் வாய்ப்பு உண்டு. தொழில் ரீதியாக எடுத்த முயற்சியில் தாமதம் ஏற்படலாம்.
விருச்சிகம்
வருமானம் திருப்தி தரும் நாள். தொலைபேசி வழித்தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். நடக்குமோ, நடக்காதோ, என்று நினைத்த காரியம் இன்று நடை பெறும். உடல்நலம் சீராகும்.
தனுசு
நினைத்தது நிறை வேறும் நாள். வாகனம் வாங்கும் முயற்சி கை கூடும். வெளியுலகத் தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும். புதிய வேலை வாய்ப்பு வருவதற்கான அறிகுறிகள் தென்படும்.
மகரம்
நட்பு பகையாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய நாள். வீண் பழிக்கு ஆளாக நேரிடும். தேவைகள் பூர்த்தியாவதில் தாமதம் ஏற்படும். புதிய ஒப்பந்தங்களில் யோசித்துக் கையெழுத்திடுவது நல்லது.
கும்பம்
மனக்குழப்பம் அகலும் நாள். மற்றவர்களின் மனம் கோணாமல் நடந்து கொள்வது நல்லது. நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளொன்றை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பச்சுமை கூடுதலாக இருக்கும்.
மீனம்
எண்ணங்கள் எளிதில் நிறை வேறும் நாள். தர்ம காரியங்களுக்கு செலவிட்டு மகிழ்வீர்கள். தந்தை வழியில் ஒத்துழைப்பு உண்டு. சொத்துகள் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி பெறும்.