தங்களது எரிபொருட்களின் விலைகளையும் அதிகரிக்க நேரிட்டுள்ளதாக இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளதன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஐந்து ரூபாய் விலை அதிகரிப்பானது தமது கூட்டுத்தாபனத்திற்கு போதுமானதல்லவென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் மக்கள் இன்று நீண்ட வரிசையில் காத்திருந்ததை அவதானிக்க கூடியதாக உள்ளது.
லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகளை அதிகரித்துள்ள நிலையில் மக்கள் சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களை நாடியுள்ளனர். சில சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ‘பெற்றோல் இல்லை’ என்ற அறிவித்தல் காட்சிப்படுத்தப்படுத்தப்பட்டிருந்ததாக எமது செய்தி தொடர்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் லங்கா ஒட்டோ டீசல் மற்றும் ஒக்டைன் 92 வகை பெற்றோல் என்பன லீற்றர் ஒன்றுக்கு 5 ரூபா வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தினால் விற்பனை செய்யப்படும் ஒக்டைன் 92 ரக பெற்றோல் ஒரு லீட்டரின் புதிய விலை 162 ரூபாவாகும்.
அத்துடன் 111 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட லங்கா ஒட்டோ டீசல் ஒரு லீட்டரின் புதிய விலை 116 ரூபாவாகும். எவ்வாறாயினும் ஒக்டைன் 95 ரக பெற்றோல் மற்றும் சுப்பர் டீசல் ஆகியனவற்றின் விலைகளில் எந்தவித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.