ஜப்பான் நாட்டின் யூஹூ தீவில் உள்ள அசோ என்ற எரிமலையில் நேற்று திடீரென சீற்றம் ஏற்பட்டது. எரிமலை வெடித்து சிதறியதில் வானத்தை முட்டும் வகையில் கரும்புகை வெளியானது.
எரிமலை குழம்பு வெளியாகவில்லை என்ற போதும் தொடர்ந்து சீற்றத்துடன் காணப்படுகிறது. அசோ எரிமலை ஜப்பானின் பிரபல சுற்றுலா தளங்களில் ஒன்றாக உள்ளது. எரிமலையில் இருந்து வெளியான கரும்புகை சுமார் 3.5 கிலோமீட்டர் உயரத்திற்கு படர்ந்தது.
அசோ எரிமலை அருகே உள்ள அசோ நகரில் சுமார் 26 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். தற்போது, எரிமலையில் சீற்றம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. எரிமலையில் இருந்து எரிமலைக்குழம்பு வெளியேறும்பட்சத்தில் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்ற மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.