ஜப்பானிய கடற்பகுதியில் கப்பல் ஒன்று, இரண்டாக உடைந்து மூழ்கியுள்ளது. இக்கப்பலிலிருந்த 21 பேர் மீட்கப்பட்டுள்ளனர் எனவும் எவரும் காயமடையவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பனாமா கொடி தாங்கிய கப்பல் ஒன்றே இவ்வாறு உடைந்தது.
தாய்லாந்திலிருந்து மரக்குற்றிகளை ஏற்றிவந்த இக்கப்பல் ஜப்பானின் ஹாசினோஹே துறைமுகத்தில் தரைதட்டியதாக தெரிவிக்கப்படுகிறது. கிறிம்ஸன் போலாறிஸ் எனும் இக்கப்பல் 39,910 தொன் எடை கொண்டதாகும்.
இரண்டாக உடைந்த இக்கப்பலிலிருந்து எண்ணெய் கசிவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இக்கப்பலிலிருந்து கசியும் எண்ணெய்யை கட்டுப்படுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.