வடக்கு கிழக்கு தமிழ்மக்களின் அரசியல் உரிமை விடயத்தை அபிவிருத்திக்குள் மூழ்கடித்து தமிழ் தேசிய அரசியலை சாகடிக்கடித்து தமிழ்மக்களை திசை திருப்ப சிங்கள அரசியல் வாதிகள் முயல்கின்றனர் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சி ஊடக செயலாளரும், இலங்கை தமிழரசு கட்சி பட்டிருப்பு தொகுதி தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
நிதி அமைச்சர் பசீல் ராஷபக்ச தமிழ்தேசிய கூட்டமைப்புடன் அபிவிருத்தி்தொடர்பாகவே தமது அரசு்பேசவுள்ளதாக கூறிய விடயம் தொடர்பாகவும் மிலிந்த்மொறக்கொட வடகிழக்கு மக்களின் தேவை அபிவிருத்தியும் வசதிகளுமே என ஊடகத்திற்கு தெரிவித்த கருத்து தொடர்பாகவும் மேலும் கூறுகையில்.
தென்னிலங்கை சிங்கள அரசியல் தலைவர்கள் தமிழர்களின் 74,வருட அகிம்சைரீதியிலான தந்தை்செல்வாவால் ஆரம்பித்து 30,வருடங்களாக இடம்பெற்ற அகிம்சை ரீதியிலான போராட்டங்களையும்,
அதன் பின்னர் இளைஞர்களால் 36,விடுதலை இயக்கங்கள் ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டு இறுதியாக 2009,மே,18 முள்ளிவாய்காலில் மௌனிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் ஆயுத போராட்டமும், அதன்பின்னர் தமிழ்தேசிய கூட்டமைப்பு உட்பட பல தமிழ்தேசிய கட்சிகள், புலம்பெயர் உறவுகள் சர்வதேச ரீதியில் தமிழர்களுக்கான உரிமைக்கான பணிகளை முன்எடுத்து வருவதும் வடக்கு கிழக்கு தமிழ்மக்கள் சோறும், தண்ணீரும், வீடுகளும், வீதிகளும், சலுகைகளும், பதவிகளுக்குமாகவே என்ற விதமாகவே அவர்களின் கருத்துகள் இருப்பதை அவதானிக்க முடிகிறது.
1956,ல் இருந்து 2010, வரை இலங்கையில் இடம்பெற்ற தமிழ்தேசிய உரிமைக்கான போராட்டத்தில் மூன்றரை இலட்சம் தமிழ் மக்களும், ஐம்பதாயிரம் தமிழ் இளைஞர்களும் பலியாகியதெல்லாம் சலுகைக்காகவா என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த போராட்டங்களால் தமிழ்,சிங்கள,முஷ்லிம் மக்களும் மாண்டுள்ளனர் என்பது உண்மைதான் ஆனால் தமிழர்களே அதி கூடுதலாக இலட்சக்கணக்காகவும், சிங்களமக்கள் ஆயிரக்கணக்காவும், முஷ்லிம் மக்கள் நூற்றுக்கணக்காவும் இறந்துள்ளனர்.
உயிரிழப்புகளுடன் பொருள் இழப்புகள் மாற்றுத்திறனாளிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடும் உறவுகள், சிறைகளிலே வதையுடன் வாழும் தமிழ் அரசியல் கைதிகள், புலம்பெயர்ந்து ஜரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ள பன்னிரெண்டு இலட்சம் தமிழர்கள், இந்தியாவில் அகதிமுகாங்களில் வாழும் பல இலட்சம் தமிழர்கள், இப்படி பல சோகங்களையும் துன்பங்களையும் தாங்கி வாழும் வடக்கு கிழக்கு தமிழ்மக்களின் தேவை சலுகைகளும் அபிவிருத்தியும் மட்டுமே என கிண்டல் செய்யும் விதமாகவே சிங்கள அரசியல் தலைவர்களின் கருத்துகள் உள்ளன.இது கண்டிக்கத்தக்கது.
2019,ல் தற்போதய ஜனாதிபதி பதவி ஏற்று 2020,ல் பாராளுமன்ற தேர்தல் இடம்பெற்று ஏறக்குறைய இரண்டு வருடங்களை அண்மிக்கின்றவேளையில் வடக்கு கிழக்கில் இருந்து தமிழ்மக்களின் அதிகூடிய ஆணையை பெற்றுள்ள தமிழ்தேசிய கூட்டமைப்புடன் ஜனாதிபதியோ அல்லது அவரின் அரசாங்கமோ பேச்சுவார்தைகளில் ஈடுபடவில்லை. பேச்சுவார்த்தைக்கு தமிழ்தேசியகூட்டமைப்புக்கு அழைப்பு விட்ட ஜனாதிபதி அவர்கள் பின்னர் அதை மீளப்பெற்று பிறிதொரு தினங்களில் பேசலாம் என ஒத்திபோட்டார்.
தற்போது பாராளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரையில் இலங்கையில் இனப்பிரச்சனை ஒன்று இருக்கிறது என்பதைக்கூட அவரால் கூற முடியாத ஒரு தலைவராகவே அவரின் உரை அமைந்தது.
இதன்பின்னர் பௌத்த்மகாசங்க பிக்குகளை அழைத்து பேசினார் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயம் பற்றி எந்த இடத்திலும் அவர் உரையாற்றாமல் தாம் பௌத்த மதத்திற்கும் சிங்கள மக்களுக்குமான ஒரு தலைவர் என்ற விதமாகவே அவரின் கருத்துகள் அமைகின்றது.
அவரின் கருத்துகள் அவ்வாறு உள்ள நிலையில் அவருடைய சகோதரர் நிதி அமைச்சர் பசீல் ராஷபக்ச தமிழ்தேசிய கூட்டமைப்புடன் அபிவிருத்தி பற்றித்தான் தமது அரசு பேசும் என கூறிய கருத்து ஒட்டுமொத்த தமிழமக்களின் முகத்திலும் கரிபூசும் செயலாகவே இது அமைந்துள்ளது.
தமிழ்மக்கள் கடந்த 74,வருடங்களாக இலங்கையை ஆட்சிசெய்த அரசியல் கட்சுகள் அனைத்தும் மாறி மாறி ஏமாற்றிவந்துள்ளனர் என்பதை இந்திய அரசும், சர்வதேச்நாடுகளும் பலதடவைகள் நன்கு உணர்ந்துள்ள நிலையிலும் அவர்களும் தமிழ்மக்களின் அரசியல் தீர்வுக்காக இலங்கை அரசை அழுத்தம் கொடுப்பதில் கூடிய கரிசனை காட்டவில்லை.
அபிவிருத்தியும், சலுகையுமே வடக்கு கிழக்கு்தமிழ்மக்களுக்கான்பிரச்சனை என்றால் தமிழ்தேசிய அரசியல் கட்சிகள் இங்கு எதற்கு ? எல்லோருமே ஏனய அமைச்சர் டக்லஷ்தேவானந்தாவைப்போல், அங்கயன் ராமநாதனைப்போல், இராஜாங்க அமைசர் வியாழேந்தினைப்போல், அபிவிருத்தி குழு தலைவர் சந்திரகாந்தனைப்போல் சோரம் போய் பதவிக்காவும் சலுகைக்காவும் தலையாட்டினாலும் அவர்களால் கூட தமிழ்மக்களின் அன்றாடப்பிரச்சனைகள் இதுவரை தீர்க்கப்படவில்லை.
தமிழ்தேசிய கூட்டமைப்பின் கொள்கை இணைந்த வடக்கு கிழக்கு தாயகத்தில் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு என்பதே உண்மை இதனை அடைய தொடர்ந்தும் தமிழ்தேசிய கூட்டமைப்பு தமது அரசியல் பணிகளை முன்கொண்டு செல்லும் எனவும் மேலும் கூறினார்.