வியாழக்கிழமை, 12 ஜூலை 2021 ஆடி 27 சதுர்த்தி விரதம், நாக சதுர்த்தி
நல்ல நேரம் 09:00 AM – 12:00 Noon
நட்சத்திரம் உத்திரம் காலை 10.22 மணி வரை அஸ்தம்
திதி வளர்பிறை சதுர்த்தி மாலை 4.15 வரை
இராகுகாலம் 01:30 PM – 03:00 PM
எமகண்டம் 06:00 AM – 07:30 AM
குளிகை 109:00 AM – 10:30 AM
சந்திராஷ்டமம் கும்பம்
மேஷம்
நம்பிக்கைக்குரியவர்கள் நல்ல தகவலைத் தரும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடை பெறும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட வகையில் அச்சுறுத்தல் தோன்றி மறையும். உத்தியோக முயற்சி கைகூடும்.
ரிஷபம்
மனதில் உற்சாகமும் செயலில் சுறு சுறுப்பும் ஏற்படும் நாள். பழைய கடன் பாக்கிகளை நாசூக்காகப் பேசி வசூலிப்பீர்கள். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. சொத்துகள் வாங்கும் முயற்சி கைகூடும்.
மிதுனம்
சகோதரர்களால் நன்மை ஏற்படும் நாள். பிறருக்காகப் பொறுப்புகள் சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரலாம். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் வாய்ப்பு உண்டு.
கடகம்
தனவரவு திருப்தி தரும் நாள். தடைப்பட்ட காரியம் இன்று நடை பெறும். திறமை மிக்கவர்களின் ஒத்துழைப்போடு முன்னேற்றம் காண்பீர்கள். பெருமைக்குரிய சம்பவங்கள் நடை பெறலாம்.
சிம்மம்
அமைதி கூடும் நாள். தொல்லை தந்தவர்கள் தோள் கொடுத்துதவ முன்வருவர். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். புதிய வியாபாரம் பற்றி ஆய்வு செய்வீர்கள்.
கன்னி
எதிர்காலம் இனிமையாக எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். வீடு சம்பந்தமான பராமரிப்பு பணியில் ஆர்வம் காட்டுவீர்கள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும்.
துலாம்
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். பிறரை விமர்சிப்பதன் மூலம் பிரச்சினைகள் உருவாகும். செலவுகளைச் சமாளிக்க முடியாமல் அருகில் உள்ளவர்களிடம் கைமாற்று வாங்கும் சூழ்நிலை ஏற்படும்.
விருச்சிகம்
நட்பு வட்டம் விரிவடையும் நாள். அலைபேசி மூலம் நல்ல தகவல் வரும். பக்கத்தில் இருப்பவர்கள் பக்கபலமாக இருப்பர். நண்பர்களிடம் கொள்கைப்பிடிப்பைத் தளர்த்திக் கொண்டு செயல்பட நேரிடும்.
தனுசு
பாராட்டுகள் குவியும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். தொலை தூரத்திலிருந்து எதிர் பார்த்த தகவல் வந்து சேரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள்.
மகரம்
நினைத்த காரியம் நிறை வேறும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். தொழில் முன்னேற்றத்திற்காக முக்கியப் பிரமுகர்களின் ஆலோசனை கைகொடுக்கும்.
கும்பம்
பணிகள் பாதியிலேயே நிற்கும் நாள். பணச்செலவு கூடுகின்றதே என்று கவலைப்படுவீர்கள். நேற்றைய சேமிப்புகள் இன்றைய செலவிற்கு கைகொடுக்கும். ஆரோக்கியத் தொல்லை உண்டு.
மீனம்
பற்றாக்குறை அகலும் நாள். பக்கத்தில் இருப்பவர்களால் ஏற்பட்ட பகை மாறும். தந்தை வழி உறவினர்களால் தக்க சமயத்தில் உதவி கிட்டும். தடைப்பட்ட காரியமொன்றை இன்று துரிதமாகச் செய்து முடிப்பீர்கள்.