Tuesday, July 5, 2022
Advertisement
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
No Result
View All Result
Tamil Press 24
Home கட்டுரைகள்

செல்வச்செழிப்பை பொது உரிமையாக்கும் பயணத்தில் சீனா

News Team by News Team
October 17, 2021
in கட்டுரைகள், முக்கியச்செய்திகள்
Reading Time: 3min read
0 0
0
செல்வச்செழிப்பை பொது உரிமையாக்கும் பயணத்தில் சீனா

BEIJING, CHINA - OCTOBER 25: Chinese President Xi Jinping speaks at the podium during the unveiling of the Communist Party's new Politburo Standing Committee at the Great Hall of the People on October 25, 2017 in Beijing, China. China's ruling Communist Party today revealed the new Politburo Standing Committee after its 19th congress. (Photo by Lintao Zhang/Getty Images)

0
SHARES
108
VIEWS
FacebookWhatsappTwitterEmail
15 / 100
Powered by Rank Math SEO
#சீனாவின் இரண்டாவது நூற்றாண்டு குறிக்கோள் நோக்கிய பயணத்தில் செல்வச்செழிப்பை ஒவ்வொருவரும் பகிர்ந்துகொள்ளும் எதிர்காலம் ஒன்று மனக்கண்ணால் பார்க்கப்படுகிறது
#பொதுஉரிமைச் செல்வச்செழிப்புக்கான( Common prosperity) செயல்முயற்சியில் புத்தாக்கம் முக்கியமான ஒரு பாத்திரத்தை வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
#சீனா வருமான விநியோகம் மீது அடிப்படையான நிறுவன ஏற்பாடுகளை செய்யவும் நடுத்தரவருமான குழுவினரை விரிவுபடுத்தவும் சமூக நேர்மையையும்  நீதியையும் மேம்படுத்துவதற்கு மிகையான வருமானங்களை (Excessive income) சரிப்படுத்தி ஒழுங்காக்கவும் திட்டமிடுகிறது.
ஹாங்ஷூ ( சினஹுவா ) சீனாவின் இரண்டாவது நூற்றாண்டு குறிக்கோள் பயணத்தில் , செல்வச்செழிப்பை ஒவ்வொருவரும் பகிர்ந்துகொள்கின்ற ஒரு எதிர்காலம் மனக்கண்ணால் பார்க்கப்படுகின்றது.ஆனால், நாடு பின்பற்றுவதற்கு முன்னர் பெறப்பட்ட அனுபவமோ( Ready made experience) அல்லது எந்தவொரு பாடப்புத்தகமோ கிடையாது.
   மூலப்பொருள் மற்றும் கலாசார அடிப்படையில் ஒவ்வொருவராலும் பகிரப்படுகின்ற செல்வமே பொதுஉரிமைச் செல்வ செழிப்பு என்று கூறப்படுகிறது.குறிப்பாக, அத்தகைய செல்வச்செழிப்பு குறிப்பிட்ட சொற்ப எண்ணிக்கையான மக்களையோ அல்லது நாட்டின் சில பகுதிகளையோ உள்ளடக்கியது அல்ல.செயல்திறமையை பயன்படுத்தி அடையப்படுகின்ற சமத்துவநிலை( Egalitarian)என்பதை விடவும் பொதுச்செல்வச்செழிப்பு என்பது அதிகமான மக்கள் தனவந்தர்களாக வருவதற்கான வாய்ப்புக்களைக் கொடுக்கக்கூடியதாக கடும் உழைப்பு மற்றும் புத்தாக்கத்தின் ஊடாக  அடையப்படவேண்டும்.
  2012 ஆம் ஆண்டில் நடைபெற்ற சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மகாநாட்டுக்கு பிறகு நாடு படிப்படியாக பொதுஉரிமைச் செல்வச் செழிப்பை கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிலையில் வைத்திருக்கிறது.
    இப்போது வறுமைக்கு எதிரான போராட்டத்திலும் சகல வழியிலும் மிதமான செல்வச்செழிப்புடைய( Moderately prosperous society)) சமுதாயமொன்றைக் கட்டியெழுப்புவதிலும் வெற்றி கிடைத்திருக்கும் நிலையில் சீனா பொதுச்செல்வச்செழிப்பை சகல அனுகூலமான சூழ்நிலைகளையும் கொண்டிருக்கிறது.மக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும் குறிக்கோள் அவசியமானது.சீனா அதன் இரண்டாவது நூற்றாண்டு குறிக்கோளை நோக்கி நடைபோடும் நிலையில், மக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதை நோக்கிய கவனக்குவிப்பு  பொதுச்செல்வச்செழிப்பை ஊக்குவிப்பதற்கு அத்தியாவசியமானது.
   ” பொதுச்செல்வச்செழிப்பு என்பது ஒரு சமூக அபிவிருத்தி கோட்பாடு மாத்திரமல்ல, பிராந்தியங்கள், நகரங்கள் மற்றும் கிராமிய பகுதிகளுக்கு இடையிலான வெளியையும் மக்களின் வருமானங்களில் உள்ள இடைவெளியையும்  குறுக்குவதை குறிக்கும் ஒரு சமுதாய மாற்றமும் கூட” என்று ஷெயியாங் மாகாணத்தின் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர்  யுவான் ஜியாயுன் கூறினார்.
   பொதுஉரிமைச் செல்வச் செழிப்புக்கான தேடல்   கடும் முயற்சியை வேண்டிநிற்கின்ற , சிக்கலான நீண்டகாலப் பணி என்பதை புரிந்துகொண்ட நிலையில் சீனா அந்த பணியை படிப்படியான– முற்போக்கான ஒயு முறையில் தொடருவதற்கு தீர்மானித்திருக்கிறது.
  கிழக்கு சீனாவில் ஒரு  பொருளாதார மையமாக விளங்கும் ஷெயியாங் மாகாணம் பொதுஉரிமைச் செல்வச்செழிப்பை ஊக்குவிப்பதற்காக செயல்முறை விளக்க வலயமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
Xi02
(1)வெளிநாட்டு வியாபாரியொருவர் கிழக்கு சீனாவின் ஷெயியாங் மாகாணத்தின் ஜிவூ நகரில் சர்வதேச வர்த்தக சந்தையொன்றில் தனது ‘கியூ.ஆர். குழூஉக்குறியை  காட்டுகிறார்.

ஏன் ஷெயியாங்? 

  அந்த மாகாணத்தில் நகரவாசிகளின்  செலவிடத்தக்க ஆள்வீத வருமானம் சகல மாகாணமட்ட பிராந்தியங்கள் மத்தியிலும் தொடர்ச்சியாக 20 வருடங்கள் முதலாவதாக இருந்துவருகிறது.கிராமவாசிகளின் ஆள்வீத வருமானம் 36 வருடங்களாக முதலாவதாக விளங்குகிறது.
    வளர்ச்சியடையாத மலைப்பிரதேசங்களுக்கு உதவுவதற்கு வளர்ச்சியடைந்த கரையோரப் பிரதேசங்களின் அனுகூலங்களை பயன்படுத்தி 2002 ஆம் ஆண்டில்  ஷெயியான் மாகாணம் ” ஷான்ஹாய்  சீய்சுவோ” (கரையோரப் பிரதேசங்களுக்கும் மலைப்பிரதேசங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பு ) என்ற திட்டத்தை முன்னெடுத்தது.இது அபிவிருத்தியில் பிராந்தியங்களுக்கு இடையில் உள்ள வெளியை குறைப்பதற்கும் ஒருங்கிணைக்கப்பட்ட நகர மற்றும் கிராமிய அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கும் ஒரு வழியாகும்.
   பொது உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் கிராமிய தொழிற்துறைகளுக்கு ஆதரவளிக்கவும் மாகாணத் தலைநகர் ஹாங்ஷூவின் சியாவோ ஷான் மாவட்டத்தினால் முதலீடுகளும் திட்டங்களும் கொண்டுவரப்பட்டநிலையில், பஷான் கிராமத்தைச் சேர்ந்த லாய் லியான் ஃபெங் என்ற பெண்மணி தனது சொந்த நகரம் புதுப்பொலிவைப் பெற்றிருப்பதை காண்கிறார்.  லாய் தனது பண்ணை வீட்டை வாடகைக்கு விட்டதன் மூலம் 2019 ஆம் ஆண்டில் பண்ணைசார் சுற்றுலா (Agritainment business  ) தொழிலை தொடங்கினார்.அதன்மூலம் அவருக்கு வருடாந்த வருமானமாக 26,000 யுவான் ( சமார் 4000 டொலர்கள் ) கிடைக்கிறது.
     அபிவிருத்திக்கு ஆதரவான இந்த கொள்கைகளினால் பயனடையும் கிராம மக்கள் பலரினால் வேறு வெளியிடங்களில் சம்பாதிப்பதற்கு பதிலாக சொந்த இடத்திலேயே உறுதியான வருமானத்தைப் பெறக்கூடியதாக இருக்கிறது. சமநிலையான அபிவிருத்தியின் முக்கியமான ஒரு குறிகாட்டியாக, ஷெயியாங் மாகாணத்தின் கிராமவாசிகளுக்கும்  நகரவாசிகளுக்கும் இடையிலான வருமான விகிதம் கடந்த வருடம் 1.96 : 1 ஆக வீழ்ச்சி கண்டது.இது தேசிய மடடத்தை விடவும் மிகவும் குறைவானதாகும்.
       “உயர்தர அபிவிருத்திக்கு மத்தியில் பொதுஉரிமைச் செல்வச்செழிப்புக்கான பாதைகளை கண்டறிய  ஷெயியாங் செய்யும் ஆய்வு தேசிய அளவில் ஒரு முன்மாதிரி வகுக்க வசதியானதாக அமையும்” என்று சீனாவின் றென்மின் பல்கலைக்கழகத்தின்  துணைத்தலைவர் லியூ யவான்ஷுன் கூறினார்.
Xi01
)சீனாவின் ஷெயியாங் மாகாணத்தின் ஜிங்னிங் ஷி சுயாட்சிப்பிரதேசத்தில் பட்டறையொன்றில் ஊழியர்கள் தேயிலையைப் பதப்படுத்துகிறார்கள்.

  நிலைபேறான புத்தாக்கம்

 பொதுஉரிமைச் செல்வச்செழிப்புக்கான செயல்முயற்சியில்  புத்தாக்கம் ( Innovation) ஒரு முக்கியமான பாத்திரத்தை வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    டிஜிட்டல் பொருளாதாரத்தை தழுவும் ஒரு முன்னணி மாகாணம் என்ற வகையில் ஷெயியாங், உயர்தரமான அபிவிருத்தியூடாக(High – quality development)  பெரும் பயனைப் பெறுவதற்கு  — பொதுஉரிமைச் செல்வச்செழிப்பக்கான முன்தேவைகளை கச்சிதமாக எதிரொலிக்கின்ற புத்தாக்க அபிவிருத்தியில் முன்னுதாரணம் ஒன்றை வகுத்திருக்கிறது.
2020 ஆம் ஆணடில் ஷெயியாங்கின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் கூட்டிய பெறுமதி 3.02 ரில்லியனை GB  எட்டியது.இது அதன் நிகர உள்நாட்டு உற்பத்தியில் 46.8 சதவீதமாகும்.
  பொருளாதார மாற்றத்துக்கு சீனா தொடர்ந்து ஊக்குவிப்பைச் செய்துகொண்டிருக்கும் நிலையில், ஷெயியாங் மாகாணத்தின் பாரம்பரிய கைத்தொழில்களும் தங்களை சுறுசுறுப்பாக தரமுயர்த்துவதில் முன்னணியில் நிற்கின்றன.
  1987 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு முன்னணி உள்நாட்டு குளிர்பான நிறுவனமான ஹாங்ஷூ வாஹாஹா குரூப்பும்  கணனிமய தயாரிப்பிலும் (Smart manufacturing) உயர் பெறுமதி சேர் உற்பத்திகளிலும்(High value added products) கவனத்தை குவிக்கின்றது ; அத்துடன் அந்த நிறுவனம் அதன் சந்தைப்படுத்தல் வகைமாதிரியை தரமுயர்த்துவதற்கு  இணையவழி செல்வழியையும் இணைய வழியற்ற செல்வழியையும்(Online and offline channels) ஒன்றுசேர்ப்பதிலும் கவனம் செலுத்துகிறது.
    “நடைமுறைப்பொருளாதாரத்தின் ( Real economy ) செயற்திறனையும் பொருளாதாரப் பயன்களையும் மேம்படுத்துவதற்காக  நடைமுறைப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு நாம் டிஜிட்டல் பொருளாதாரத்தைப் பயன்படுத்துகிறோம்” என்று கம்பனியின் தலைவர் சொங் கின்கூ கூறினார்.
   “பொதுஉரிமைச் செல்வச்செழிப்பை ஊக்குவிப்பதற்கான ஒரு செயல்விளக்க வலயத்தை கட்டியெழுப்புவதில் ஷெயியாங் மாகாணத்தின் முயற்சிகளில் ஒரு முக்கியமான வளர்ச்சி  யைத் தூண்டும் இயந்திரமாக டிஜிட்டல் பொருளாதாரம் வந்துவிட்டது” என்று ஷெயியாங் கொங்ஷாங் பல்கலைக்கழகத்தின்  தலைவர்   யூ ஜியாங்சிங் கூறினார்.
  டிஜிட்டல் தொழில்நுட்பம் வறுமைக்குறைப்பு, பொதுச்சேவை மற்றும் அடிமட்ட ஆட்சிமுறையை வலுப்படுத்தி, மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் முக்கியமான ஒரு பாத்திரத்தை வகிக்கிறது.இந்த அனுபவங்கள் சகலதுமே நாடு பூராவும் பிரதிபண்ணி மேம்படுத்தக்கூடியவையாகும்.
   டிஜிட்டல் பொருளாதாரத்தில் தங்கியிருப்பதன் மூலம் ஷெயியாங் மாகாணம் சந்தையை அடிப்படையாகக்கொண்ட, சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட, சர்வதேசமயப்பட்ட வர்த்தக சூழ்நிலையை பேணி வளர்ப்பதில் விரைந்து முன்னேறுகிறது.
   பொதுஉரிமைச் செல்வச்செழிப்பை மேம்படுத்துவது தொடர்பில் ஜூனில்  வெளியிடப்பட்ட ஒரு வழிகாட்டல் ஷெயியாங்கிற்கான பாதைாயை மேலும் ஔியூட்டியிருக்கிறது. இந்த மாகாணம் 2035 ஆம் ஆண்டளவில் பொதுஉரிமைச் செல்வச்செழிப்பை சாதிப்பதற்கு  கடுமுயற்சி எடுக்கும்; அதன் குடியிருப்பு வருமானம் அபிவிருத்தியடைந்த நாடுகளின் மட்டத்தை அடையும்.

 

Xi03
)ஷெயியாங் மாகாணத்தின் ஹுஷூ நகரில் சிங்ஃபென்மிங் குரூப்பின் பட்டறையொன்றில் 5ஜி இன்ரெலியன்ற் ரோபோ ஒன்று புடவை உற்பத்திகளை விநியோகம் செய்கிறது.

 உலகில் அதிக சனத்தொகையைக் கொண்ட சீனா முற்றுமுழுதான வறுமைக்க பிரியாவிடை கொடுத்து சகல வழிகளிலும் மிதமான  சுபீட்ச சமுதாயத்திற்குள் காலடியெடுத்து வைத்த பிறகு நாடு பூராவும் சகல மட்டங்களிலும் உள்ள அதிகாரிகள் அபிவிருத்தியை மேலும் ஊக்குவிப்பதற்கு புதிய முன்முயற்சிகளை ஆராய்கிறார்கள்.

  சீனா  விஞ்ஞான ரீதியான ஒரு பொதுக் கொள்கை முறைமையையும் சகலருக்கும் பயன்தரக்கூடிய நியாயபூர்வமான விநியோக முறைமையையும் நிறுவ சூளுரைத்திருக்கிறது.மக்களின் நல்வாழ்வுக்கு உதவக்கூடியதும் அவர்களின் அடிப்படைத் தேவைகளை உத்தரவாதம் செய்யக்கூடியதுமான  ஆரம்ப செயற்திட்டங்கள் மீது கவனம் செலுத்தப்படும்.
  சமூக நேர்மையையும் நீதியையும் மேம்படுத்துவதற்கு வருமான விநியோகத்தின் மீது அடிப்படை நிறுவன ஏற்பாடுகளை செய்வதற்கும் நடுத்தர வருமான குழுவின் அளவை விரிவுபடுத்துவதற்கும் மிகை வருமானங்களை சரிசெய்வதற்கும் சீனா திட்டமிடுகிறது.
  சொத்து உரிமைகள் பற்றும் புலமைச்சொத்து உரிமைகளைப் பாதுகாத்தல், பல்வேறு வகைப்பட்ட மூலதனங்களின் ஆரோக்கியமான அபிவிருத்தி மற்றும் விவசாயிகள் மத்தியிலும் கிராமப்பகுதிகளிலும் பொதுஉரிமைச் செல்வச்செழிப்பை மேம்படுத்துதல் உட்பட பல்வேறு திட்டங்களையும் சீனா கொண்டிருக்கிறது.
Tags: எதிர்காலம்சீனாஷி ஜின் பிங்
News Team

News Team

Currently Playing

Recent Posts

  • பரீட்சை பெறுபேறு ஆகஸ்ட் மாதத்தில்: உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு
  • இலங்கைக்கான கடன் முறையை நிராகரித்த IMF: அமெரிக்க பொருளாதார நிபுணர்
  • தற்போதைய அரசாங்கம் மீது வெளிநாடுகளுக்கு நம்பிக்கை இல்லை
  • மின்சாரம், எரிபொருள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்
  • மலேஷியாவிலிருந்து இலங்கைக்கு பெற்றோலும் மண்ணெண்ணெயும்
  • All
  • இலங்கை
பரீட்சை பெறுபேறு ஆகஸ்ட் மாதத்தில்: உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு

பரீட்சை பெறுபேறு ஆகஸ்ட் மாதத்தில்: உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு

July 4, 2022
இலங்கைக்கான கடன் முறையை நிராகரித்த IMF: அமெரிக்க பொருளாதார நிபுணர்

இலங்கைக்கான கடன் முறையை நிராகரித்த IMF: அமெரிக்க பொருளாதார நிபுணர்

July 4, 2022
தற்போதைய அரசாங்கம் மீது வெளிநாடுகளுக்கு நம்பிக்கை இல்லை

தற்போதைய அரசாங்கம் மீது வெளிநாடுகளுக்கு நம்பிக்கை இல்லை

July 4, 2022

Tamil Press24

Tamil Press24

online news

தொடர்புகளுக்கு

தொலைபேசி : +94 771181590

விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590

மின்னஞ்சல் : [email protected]

 

 

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Tamil Press24 - 2021

No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்

Tamil Press24 - 2021

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
AllEscort