இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவை நீக்கும் தீர்மானம் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இன்று(04/01/22) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கருத்து தெரிவித்த அவர்,
இந்த முடிவு குறித்து கட்சிக்குள் முன்னர் கலந்துரையாடப்பட்டு எடுக்கப்பட்ட தீர்மானமோ அல்ல.
நெருங்கிய நண்பன் என்ற வகையில் இந்தச் செய்தியை அறிந்ததும் வருத்தமடைந்ததாக கூறினார்.
அரசியலமைப்பின் மூலம் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது என்றார்.